தென் ஆப்பிரிக்காவில் இருந்து அதி வேகமாக பரவி வருகிறது ஓமைக்ரான் வைரஸ். அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த தகவல் தவறானது ! இதை யாரும் நம்ப வேண்டாம்! இதுபோல சட்டவிரோதமாக வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்!
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அடிக்கடி கனமழை காரணமாக தமிழகத்தில் விடுமுறைகள் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது." பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ,கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் "என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் "இதுவரை நடைபெற்ற படியே தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடைபெற வேண்டும் எனவும் நேரடி தேர்வு நடைபெற கூடாது" எனவும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவற்றை எதிர்த்து உயர் கல்வித்துறை அமைச்சர்
பொன்முடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மன்னித்து எவ்வித தண்டனையும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டனர்."
தேர்வுகள் அனைத்தும் சொன்னபடி ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் மேலும் நடத்தி முடிக்காத பாடங்களை பெண்களுக்கு கூடுதல் வகுப்புகள் எடுத்து நடத்தி முடிக்கப்படும்" என பள்ளிகல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த கருத்துக்களுக்கு எதிராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "இது அனைத்தும் பொய்யானவை இவற்றை யாரும் நம்ப வேண்டாம்! இதுபோல வதந்திகளை யாரும் இனி பரப்ப வேண்டாம்!" என கேட்டுக் கொண்டுள்ளார்.